புதிய முதல்வரான ‘ஜார்க்கண்ட் டைகர்’.. யார் இந்த சம்பாய் சோரன் ?
ஜார்க்கண்ட் டைகர் என அழைக்கப்படும் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். டைகர் என அழைக்க காரணம் என்ன ? யார் இந்த சம்பாய் சோரன் என்று பார்க்கலாம்.
ஜார்க்கண்ட் டைகர் என அழைக்கப்படும் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். டைகர் என அழைக்க காரணம் என்ன? யார் இந்த சம்பாய் சோரன் என்று பார்க்கலாம்.
அதாவது நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய முதலமைச்சராக பழங்குடியின சமுதாயத்தின் முன்னணி தலைவர் 67 வயதான சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரனின் மனைவி புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக இவர் தேர்வானார். விவசாய குடும்பத்தில் பிறந்தவரான சம்பாய் சோரன் 10-ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி படித்திருக்கிறார்.
சம்பாய் சோரன், செரைகேலா தொகுதியில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். அதன்பின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றியவர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவர் சம்பாய் சோரன் அதனைத்தொடர்ந்து அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக அரசின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் சம்பாய் சோரன் இந்நிலையில் நேற்று ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?