அநீதி வெளியேற ஐந்து ஆண்டுகள்... கவிதையில் பஞ்ச் வைத்த வைரமுத்து

பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும் சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Apr 18, 2024 - 11:48
அநீதி வெளியேற ஐந்து ஆண்டுகள்... கவிதையில் பஞ்ச் வைத்த வைரமுத்து

பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும் சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ள நிலையில், கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்து, தமது X தள பக்கத்தில் தேர்தல் விழிப்புணர்வுக் கவிதை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் பாடலாசிரியர் வரிசையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருப்பவர் வைரமுத்து, கலைமாமணி, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருந்தாலும் கவிப்பேரரசு என்ற தமது தனித்துவமான அடைமொழியால் அறியப்படுபவர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றவர் ஆவார். 

பாடகி சின்மயியிடம் தவறாக நடந்துகொண்டதாக இவர்மீது எழுந்த மீடூ புகாரை அடுத்து, இவர் மீது சர்ச்சைகள் மிகுந்து வருகிறது. மேலும், ஆண்டாள் குறித்த கட்டுரையை இவர் எழுதி, அதிலும் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்று, இலக்கியம் மற்றும் ஆன்மிக அமைப்புகள் இவர் மீது வழக்குப்போட்டு, வைரமுத்து மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தது ஊர் அறிந்த ஒன்று. இதனால் திரைப்பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கப்பெறாமல் இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரம் கிசுகிசுத்து வருகிறது. 

இதற்கிடையில், திமுகவோடும் திராவிட சித்தாந்தத்தோடும் நெருங்கிய தொடர்புள்ள இவர், அவ்வப்போது சமூக பிரச்னைகளைச் சாடி தமது X தளப் பதிவில் தொடர்ந்து கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பதிவு ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow