Vettaiyan: வேட்டையன் ப்ரோமோஷன்.. ரஜினியுடன் இணைந்த அனிருத்… லீக்கான போட்டோஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் பட ப்ரோமோஷனுக்காக ரஜினியுடன் அனிருத் இணைந்த புகைப்படங்கள் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை: தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170வது படமாக உருவாகி வருகிறது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பதும் இப்படத்தின் பலம் எனலாம். ரஜினி – நெல்சன் காம்போவில் வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் வேட்டையன் திரைப்படமும் ரஜினியின் ப்ளாக் பஸ்டர் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டையன் ரிலீஸ் தேதி முடிவாகிவிட்டதால், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினியும் விரைவில் லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் இணையவுள்ளார். இதனையடுத்து வேட்டையன் படத்தின் ஷூட்டிங் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், வேட்டையன் படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் தசெ ஞானவேல் மாஸ்டர் பிளானுடன் களாமிறங்கினார். அதன்படி வேட்டையன் படத்தில் செலப்ரேஷன் மோடில் செம்மையான பார்ட்டி சாங் ஒன்றை அனிருத் இசையில் ரெடி செய்துவிட்டார்.
அதுமட்டும் இல்லாமல், அந்தப் பாடலில் ரஜினியுடன் அனிருத்தையும் குத்தாட்டம் போட வைத்துள்ளார் தசெ ஞானவேல். இதற்காக நடைபெற்ற படப்பிடிப்பின் போது ரஜினியும் அனிருத்தும் இணைந்து டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. அதன்பின்னர் உடனடியாக அந்த புகைப்படங்கள் டெலிட் ஆகியுள்ளன. இதனால் வேட்டையன் படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைய, இப்போது பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ராக்ஸ்டார் அனிருத் பெர்ஃபாமன்ஸ் செய்துள்ளது உறுதியாகியுள்ளது. எனவே வேட்டையன் படத்தில் பல சம்பவங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக மாமன்னன், அயலான் படங்களில் ஏஆர் ரஹ்மான் சின்னதாக ஸ்டெப்ஸ் போட்டு கூஸ்பம்ஸ் கொடுத்திருந்தார். அதேபோல், ரஜினியுடன் அனிருத் இணைந்துள்ளது வேட்டையன் படத்துக்கு தரமான ப்ரோமோஷனாக அமையும்.
What's Your Reaction?