ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவமனைக்கு மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டிய திமுக எம்.எல்.ஏ...

ராமநாதரபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மும்மத பிரார்த்தனையுடன் ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அடிக்கல் நாட்டினார்.

Mar 1, 2024 - 08:33
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவமனைக்கு மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டிய திமுக எம்.எல்.ஏ...

கீழக்கரையில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  ராமநாதபுரம் எல்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது, நகர மன்றத்தலைவர் செகானஸ் ஆபிதா ஆகியோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ தலைமையில் கட்டிடங்களுக்கு மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேசிய அவர்,  தாலுகா அரசு மருத்துவமனை ரூ.9 கோடியும், கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.20 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow