தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறை என்ன? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !!
தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறை என்ன என்பது தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோரை மத்திய அரசு பரிந்துரையின் பேரில் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இது ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனக்கூறி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்குவது முறையல்ல எனக்கூறி மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
நாட்டின் முக்கிய எதிர்கட்சியின் தலைவர் கூட, தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருந்தார் எனவும் நிச்சயமற்ற நிலை உருவாகும் என்பதால் நியமனத்தை நிறுத்திவைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், மனுக்கள் மீது 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையர்களின் தகுதிச்சான்றுகளை கேள்வி கேட்கவில்லை எனவும், தேர்வு செய்யப்பட்ட நடைமுறை தொடர்பாகவே கேட்பதாககவும் நீதிபதிகள் கூறினர்.
What's Your Reaction?