கேன்டிடேட் செஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ் !

கேன்டிடேட் சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம்வயதில் வென்ற வீரர் என்ற பெருமையை இந்தியாவின் குகேஷ் பெற்றுள்ளார்.

Apr 22, 2024 - 06:55
கேன்டிடேட் செஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ் !

கனடாவின் டொரோன்டோ நகரில் "பிடே" கேன்டிடேட் சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. 8 வீரர்கள் - 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிப்பவர் உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பைப் பெறுவர்.

இதில் 17 வயதான சென்னையைச் சேர்ந்த குகேஷ் பங்கேற்று, 13வது சுற்று ஆட்டத்தில் பிரான்சுடனும், தொடர்ந்து அமெரிக்காவுடனும் மோதினார். இதையடுத்து 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த குகேஷ், கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் நகருராவை எதிர்கொண்டார். தோற்றால் வெளியேற வேண்டும் என்ற சூழலில் வென்றே ஆக வேண்டும் என நிலையில் விளையாடிய குகேஷ், 9 புள்ளிகளைப் பெற்றார்.

மற்றொரு அணியினர் ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து குகேஷ் வெற்றிவாகை சூடினார். இதன்மூலம் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற நபர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இதைத்தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டின் லிரெனுடன் குகேஷ் போட்டியிடுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow