திமுக கூட்டணியில் சேரும் புதியகட்சிகள் எது: கனிமொழி சொன்ன சீக்ரெட்
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் விரைவில் இணைய உள்ளது. அதனை தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, கட்சித் தலைவர் அறிவிப்பை வெளியிடுவார். கருத்து கணிப்புகள் வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.
சமீபத்தில் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தோடு தி.மு.க. பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு மனுக்களைத் தருகிறார்கள். அடுத்தது அமையப்போவது திமுக ஆட்சிதான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன்வைக்கிறார்கள்.
நெல்லையில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது சந்தோஷமாக உள்ளது.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று கூறினார்.
What's Your Reaction?

