"திமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே! " - திமுக பிரமுகர் முகநூலில் பதிவு!

Feb 5, 2024 - 22:14
"திமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே! " -  திமுக பிரமுகர் முகநூலில் பதிவு!

மக்கள் பணிகளை செய்ய விடாமல்  ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் தடுப்பதாக  ஒன்றிய குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என முகநூலில் பதிவு செய்த திமுக ஒன்றிய குழு உறுப்பினரால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.  

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியை சேர்ந்த இவர்,   பெரியவரிகம் 6 வது திமுக  மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். 

இந்நிலையில் இவர் தனது முகநூலில் 'திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே!,   மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பு ' என பதிவு செய்துள்ள நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்ட போது:- 

நான் 6 வது வார்டு பெரியவரிகம் துத்திப்பட்டு மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளேன்.  மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்தி சீனிவாசன், ஆகியோர்  மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுப்பதில்லை. டென்டரும் முறைபடி இல்லை, ஒன்றிய குழு கூட்டமும் சரியாக வைப்பது இல்லை, கவுன்சிலர்களையும் யாரும் மதிப்பது இல்லை, மனம் வெறுத்து போய் பதிவு செய்தேன்.

மேலும் இந்த மூன்று வருடத்தில் பெரியவரிகத்தில் ஒரு சில வேலைகள் மட்டுமே செய்துவிட்டு, மற்ற வேலைகளை ஒன்றிய தலைவர்  ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே செய்து விடுகிறார்கள்.  இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை"  என தெரிவித்தார். 

 மேலும்,  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம்  புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்த  அவர் கிளை செயலாளராக இருந்த போது இருந்த  மரியாதை கூட தற்போது கட்சியில் இல்லை எனவும் கூறினார். 

அவர் தேர்தலில் 15 லட்சம் செலவு செய்து வெற்றி பெற்று மக்கள் பணிகளை செய்ய விடாமல்  ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய குழு துணை தலைவர் ஆகியோர் தடுக்கின்றனர் எனவும், "மனம் வெறுத்து உட்கார்ந்து உள்ளேன்",  எனவும்  தெரிவித்தார்.

இதையும் படிக்க  | " நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இதை வைத்துதான் முடிவு செய்வோம்" - விக்கிரமராஜா பேச்சு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow