ராகுல்காந்தியின் பாரத நீதி யாத்திரையில் 5 நாட்கள் குறைப்பு
உத்தரப்பிரதேசத்தில் பிப்.22ஆம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ளதால் பயணம் 5 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உத்தரப்பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள பாரத நீதி யாத்திரைப் பயணம் 5 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த ஆண்டு பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டார். இதில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலதரப்பு மக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் ராகுல்காந்தியின் பாரத நீதி யாத்திரை 5 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, "ராகுல் காந்தியின் பாரத நீதி யாத்திரை 5 நாட்கள் குறைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்.22ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளதால் உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மற்ற பகுதிகளில் ராகுல்காந்தியின் நீதி யாத்திரை திட்டமிட்டப்படி நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தியின் உத்தரப்பிரதேச பயணம் தேர்வு காரணமாக குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், RLD கட்சி I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறி NDA கூட்டணியில் இணைந்ததால் யாத்திரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது. இதைத்தொடர்ந்து ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி(RLD)NDA கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?