வண்டிப்பாளையம் கோவிலில் ரூ.2.20 லட்சம் திருட்டு
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கூப்பர் உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பீரோவை உடைத்து ரூ.2.20 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் கந்த சஷ்டி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.அப்போது விழாவில் சேகரிக்கப்பட்ட ரொக்கம் ரூபாய் 2.20 லட்சம் கோவில் பீரோவில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு கோவில் சிப்பந்தி https://pikenani.espoch.edu.ec/ நாதமுனி என்பவர் வழக்கமாக கோவிலை பூட்டி விட்டு சென்று இன்று காலை 6 மணிக்கு மீண்டும் கோவிலை திறந்த போது கோவில் உள்ளே இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.2.20 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீசார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கூப்பர் உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






