அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு இல்லை

Jan 8, 2024 - 14:31
அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நான்கு மாவட்டங்களில் அதிக கன மழைக்கு பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழ்நாடு முழுவதும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை இல்லாமல், பனிப்பொழிவு அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதல் திடீரென மழை பொழிய தொடங்கியது. இதில் தருமபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, சிட்லிங், சித்தேரி,  பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 3 மணியிலிருந்து மழை பெய்து வருகிறது. 

மேலும் தற்பொழுது சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், விடுமுறை அறிவித்திருக்கும் நிலையில் தர்மபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு இல்லை எனவும், வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால்  பணிக்கு செல்வோர் மழையில் நனைந்துவாறு செல்கின்றனர்.

-பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow