லாரி சக்கரத்தில் சிக்கிய தம்பதி...கணவன் கண் முன்னே மனைவி பலியான சோகம்...

Feb 29, 2024 - 10:52
Feb 29, 2024 - 11:01
லாரி சக்கரத்தில் சிக்கிய தம்பதி...கணவன் கண் முன்னே மனைவி பலியான சோகம்...

சென்னை போரூர் அருகே இருசக்கரவாகனத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது, தவறி விழுந்ததில், பெண் ஒருவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை அம்பத்தூரையை சேர்ந்தவர்கள் வன்னியராஜன் -மைதிலி தம்பதி. இருவரும் போரூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சமயபுரம் அருகே, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளனர். சாலை குறுகலாக இருந்ததால், நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில், மைதிலி மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. 

கால்கள் இரண்டும் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்ட மைதிலி, ஆம்புலன்ஸ் மூலம் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று(29.02.2024) காலை சிகிச்சைப் பலனின்றி மைதிலி மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனரக வாகனங்கள் இந்த குறுகிய சாலையை பயன்படுத்துவதாலும், குண்டும் குழியுமாக சாலைகள் பராமரிப்பு இன்றி இருப்பதாலும் இப்பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கடந்து சில மாதங்களுக்கு இதேப் பகுதியில், சிலிண்டரை ஏற்றி சென்ற வாகனம் திடீரென மின்கம்பத்தின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow