ஏரியில் தத்தளித்த இருவரை காப்பாற்ற இறங்கிய பெண் - 3 பேருக்கு நேர்ந்த சோகம்
இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேட்டூர் அருகே நங்கவள்ளி ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள்கள் ரேவதி, திவ்யதர்ஷினி மற்றும் மகன் சிவஸ்ரீ துணி துவைப்பதற்காக கொத்தி குட்டை ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கியபோது, ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர்.
இதனை பார்த்த ரேவதி இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவரும், நீரில் மூழ்கிய நிலையில், மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சடலங்களை மீட்டு நங்கவள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?