9-ம் தேதி வெளியாகுமா 'ஜனநாயகன்'? தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி நடிகர் விஜய் நீதிமன்றத்தில் அவசர வழக்கு
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். இன்று மதியம் இரண்டு கால் மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச்சான்று கிடைக்பெறததால்பட தயாரிப்பு நிறுவனமான கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பிடி ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார்..
வழக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.
What's Your Reaction?

