வெளியில் வருவாரா செந்தில்பாலாஜி? ஜாமின் வழக்கில் இன்று தீர்ப்பு!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்கள் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. .
இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு இதுவரை 22 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
செந்தில்பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. பிப்ரவரி 14, 15, 21 தேதிகளில் நடந்த விசாரணயின்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்.,28) காலை 10:30 மணி அளவில் முதல் வழக்காக தீர்ப்பளிக்க உள்ளார்.
மேலும் படிக்க : https://kumudam.com/Ajith-Krishnan-is-the-First-Tamil-astronaut-to-go-to-space-project
What's Your Reaction?