தவெக ஆட்சி அமைக்குமா ?  விசிக, கம்யூனிஸ்ட்டுகள் கையில் துருப்பு சீட்டு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக விசிக, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த 3 கட்சிகளும் என்ன முடிவு எடுக்க போகின்றன என தமிழகமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறது. 

தவெக ஆட்சி அமைக்குமா ?  விசிக, கம்யூனிஸ்ட்டுகள்  கையில் துருப்பு சீட்டு
விசிக, கம்யூனிஸ்ட் கையில் துருப்பு சீட்டு

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமார் தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்தார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். அவர்கள் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இவ்வாறு தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஆட்சி அமைக்க 118 பேரின் ஆதரவை கவர்னர் கேட்கும் நிலையில் காலை 11 மணிக்கு தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில்,  விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக  ஆலோசனைக்கு பின்னர் 3 கட்சிகளும் அறிவிக்க உள்ளன.  இந்த கட்சிகளின் அறிவிப்புக்கு பின்பு தான் தவெக ஆட்சி அமையும் என தெரிய வரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow