பல பெண்களுடன் தொடர்பைக் கண்டித்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்

ஆதாரங்களை கொண்டு வழக்கு பதிவு செய்யாமல், குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில் போலீசார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  

Dec 12, 2023 - 15:15
Dec 12, 2023 - 17:43
பல பெண்களுடன் தொடர்பைக் கண்டித்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை மறைத்து திருமணம் செய்துக்கொண்டதாகவும், பல பெண்களுடன் ஆபாச உரையாடல், நிர்வாண படங்களுடன் பெண் ஒருவர் நேற்று டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் அளித்தார். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த ஆர்த்தி(30). இவர் மேட்ரிமோனியில் அளித்த விபரங்களின் அடிப்படையில்,  தஞ்சாவூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த விவேக்ராஜ் என்பவருடன், கடந்த ஜூன்.6ம் தேதி திருமணம் நடந்துள்ளது.விவேக்ராஜ் பல்வேறு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். 

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, சென்னையில் விவேக்ராஜின் அக்கா வீட்டிற்கு சென்று திரும்பியபோது, அவரது மொபைலில் உள்ள அவரது அக்கா வீட்டில் எடுத்த போட்டோக்களை அனுப்ப ஆர்த்தி எடுத்துள்ளார். அப்போது, விவேக்ராஜ் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், நிர்வாணமான பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் பேசும்போது எடுத்த ஸ்கீர்ன் சாட் ஆகியவற்றை பார்த்து ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து விவேக்ராஜிடம், ஆர்த்தி கேட்டுள்ளார்.அப்போது, வெளியில் கூறினால் தொலைத்துவிடுவேன் என விவேக்ராஜ் மிரட்டியுள்ளார். அவரது பெற்றோர்களும் அச்சுறுத்தியுள்ளனர்.இதேப்போல் ஒரு முறை கர்ப்பிணியான ஆர்த்தியை, விவேக்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் ஆர்த்தியின் கரு சிதைந்துள்ளது. 

இது தொடர்பாக ஆர்த்தி கடந்த மாதம் 27ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி.,யின் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் முறையாக விசாரிக்கவில்லை. மீண்டும் எஸ்.பி.,யிடம் முறையிட்ட பிறகு, மகளிர் போலீசார் ஏனோதானோவென்று பதிவு செய்துள்ளனர்.  மேலும், அவர் கொடுத்த ஆதாரங்களை கொண்டு வழக்கு பதிவு செய்யாமல், குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில் போலீசார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  

இதனால் மனமுடைந்த ஆர்த்தி நேற்று, தஞ்சாவூர் டி.ஐ.ஜி., அலுவலகத்தில், தனது வழக்கறிஞர் ஜீவக்குமார் உள்ளிட்டோர் மூலம், விவேக்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow