பொங்கல் பண்டிகை-தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் ப்அமோக விளைச்சல்

மஞ்சள் 18 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Jan 12, 2024 - 22:06
பொங்கல் பண்டிகை-தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் ப்அமோக விளைச்சல்

பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் மங்களகரமாக மஞ்சள் குலைகள் பொங்க பானைக்கு கட்டப்படுவது வழக்கம். தைத் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே உள்ள சேர்வைகாரன்மடம், தங்கம்மாள்புரம், சக்கமாள்புரம், சிவஞானபுரம் ஆகிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 70 ஏக்கருக்கு மேல் மஞ்சள் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் மஞ்சள் கிழங்குகளை விவசாயிகள் நடவு செய்து தற்போது அவை செழித்து வளர்ந்து பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மஞ்சளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி வெற்றிவேல்கூறுகையில், எங்கள் சேர்வைகாரன் மடம் பகுதியில் தலைமுறை தலைமுறையாக மஞ்சள் பயிரிட்டு வருகிறது.
வழங்கமாக 6 மாத கால பயிர் மஞ்சள், ஆரம்பத்தில் தூத்துக்குடியில் பரவலாக மழை இல்லை. இப்ப மழை தேவை கிடையாது ஆனால் தற்போது மழை அதிகமாக பெய்துள்ளது. குறிப்பாக இந்த மழையால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது.நிறைய இடங்களில் மஞ்சள் முளைத்தும் முளைக்காமல் பாதிப்படைந்தது.அரசு இதற்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும்”
என்றார்.

தூத்துக்குடி மஞ்சளுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால் இது செம்மண் பூமி, நல்ல மனத்துடன் இருக்கும் என்பதால் கனடா, பாரிஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மஞ்சள் 18 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த மஞ்சள், கேரளா, பம்பாய், டெல்லி போன்ற மாநிலங்களுக்கும், சென்னை, ஈரோடு, மதுரை, நெல்லை மாவட்டங்களும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow