ஒட்டகம் மற்றும் கழுதை பாலில் டீ விற்றவர்கள் மீது நடவடிக்கை

பண்ணை வேலையாட்கள் வைத்திருந்த செல்போனில், ஒட்டகங்களை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டது

Nov 22, 2023 - 15:19
Nov 22, 2023 - 19:19
ஒட்டகம் மற்றும் கழுதை பாலில் டீ  விற்றவர்கள் மீது நடவடிக்கை

ஒட்டகம் மற்றும் கழுதை பாலில் டீ தயாரித்து வியாபாரம் செய்த பண்ணை மீது விலங்குகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விலங்குகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சங்கமித்ரா பண்ணை இயங்கி வருகிறது.இங்கே ஒட்டகம், கழுதை, குதிரை, நாய்க்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டகம் மற்றும் கழுதையிலிருந்து கறந்த பாலில் டீ போட்டு வியாபாரம் செய்துள்ளனர்.பாலாகவும் விற்பனை செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மற்றும்  தன்னார்வலர்கள் இந்திய விலங்குகள் நல வாரியம் இணைந்து ஆய்வு நடத்தினர். இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல் விலங்குகள் வைத்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பண்ணை வேலையாட்கள் வைத்திருந்த செல்போனில், ஒட்டகங்களை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டது.உடனடியாக பண்ணையில் இருந்த இரண்டு ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதைகள், ஒரு நாய் மற்றும் இரண்டு குட்டிகள் ஆகியவை மீட்கப்பட்டது.

இரண்டு ஒட்டகங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சென்னையில் உள்ள பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் வளாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.நான்கு குதிரைகள் மற்றும் இரண்டு கழுதைகள் ஒரு நாய் மட்டும் இரண்டு குட்டிகள் பராமரிப்புக்காக உதகையில் உள்ள தன்னார்வலர் நடத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக விலங்குகளை வதை செய்த சங்கமித்ரா பண்ணை உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow