“அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பண்ணுவாங்க” ஈரான்-அமெரிக்க போரை வைத்து ஆன்லைன்  பெட்டிங்

ஈரான், அமெரிக்க போரை வைத்து ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்துள்ளது. ஈரான், அதிபர் டிரம்ப் ஆகியோர் மீது டாலர் கணக்கில் பெட்டிங் கட்டப்படுகிறதாம். 

“அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பண்ணுவாங்க” ஈரான்-அமெரிக்க போரை வைத்து ஆன்லைன்  பெட்டிங்
ஈரான்-அமெரிக்க போரை வைத்து ஆன்லைன்  பெட்டிங்

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலில ஈடுபட்டது. அதுமட்டுமின்றி, அமெரிக்க ஆதரவு அளிக்கும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும் ஹாரிஸ் நீரிணை மூடியதன் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்தும் என்றும் தற்போது தாக்குதலை நிறுத்தும் என்றும் ஆன்லைனில் சூதாட்டம் நடைபெற்றதுள்ளது. அமெரிக்காவில் பாலி மார்க்கெட், கால்சி ஆன்லைன் சூதாட்ட தளம் மூலம் பணம் கட்டி பல கோடி பேர் லாபம் பார்த்துள்ளனர். பிப்.28-க்கு முன்னரே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என பந்தையம் கட்டி சிலர் பலகோடி டாலர் வென்றுள்ளது தெரிய வந்துள்ளது. 

வெனிசுலா அதிபர் மதுரா, பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆன்லைனில் பந்தயம் கட்டி சிலர் பல கோடி சம்பாதித்துள்ளனர். மார்ச் 31-க்குள் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிப்பார் என்று 70,000 டாலர் பந்தயம் கட்டிய ஒருவர் 8,20,000 டாலர் வென்றுள்ளார். இன்னும் ஆன்லைன் மூலம் ஈரான் போர் குறித்து பெட்டிங் தீவிரமாக நடைபெறுவதும் தற்போது தெரிய வந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow