உங்க இஷ்டத்துக்கு முடியாது, நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பம் நட தடை: சென்னை மாநகராட்சி புது கண்டிஷன்

சென்னையில் நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பங்கள் நட இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

உங்க இஷ்டத்துக்கு முடியாது, நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பம் நட தடை: சென்னை மாநகராட்சி புது கண்டிஷன்
நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பம் நட தடை: சென்னை மாநகராட்சி புது கண்டிஷன்

கொடிக்கம்பங்கள் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தலைநகரில் இனி இஷ்டத்திற்கு யாரும் கொடிக்கம்பங்களை நடமுடியாது. அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அந்த வழிமுறைகள் வெளிமுறையில் கூறியிருப்பதாவது, சென்னையில் அரசியல், மதம் அல்லது சங்கம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காகத் தற்காலிகக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அனுமதி பெறாமல் கொடிக்கம்பங்களை நிறுவினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விண்ணப்பித்த பிறகு கூடுதல் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கொடிக்கம்பங்கள் நடுவதற்கான முன் அனுமதி பெற சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.மதச்சார்பான நிகழ்வுகள்: மத வழிபாடுகள் மற்றும் விழாக்கள் தொடர்பான தற்காலிகக் கொடிக்கம்பங்களுக்கு 7 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் சங்க நிகழ்ச்சிகளுக்கான கொடிக்கம்பங்கள் நடுவதற்கும் அனுமதி அவசியம்.அனுமதி பெறாத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இந்த விதிகளைப் பின்பற்றித் தற்காலிகக் கொடிக்கம்பங்களை நிறுவ வேண்டும் என சென்னை மாநகராட்சி புது உத்தரவு பிறப்பித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow