கசந்த காதல் திருமணம்.. ஆசை கணவன் டார்ச்சர்? புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி..
ஈரோடு மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண், இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த மீனா என்ற இளம்பெண், பெற்றோரின் சம்மதத்துடன் மன்னாதம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார்.
யுவராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மீனா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில், தங்கை மீனாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரிகள் கண்ணீர் மல்க மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனிடையே, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தனது தங்கை மீனா, யுவராஜ் வீட்டில் பல்வேறு இன்னலுக்கு ஆளானதாகவும், கடந்த ஒரு வாரம் அவரை யுவராஜ் டார்ச்சர் செய்தியிருப்பதாகவும் அவரது சகோதரி மோகனப்பிரியா குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் யுவராஜை காப்பாற்ற போலீஸ் முயற்சிப்பதாகவும், அவரை பாதுகாப்பதாகவும் குற்றம்சாட்டிய மீனாவின் மற்றொரு சகோதரியான நர்மதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மீனாவிற்கு என்ன கொடுமை நேர்ந்தது என்பதை போலீசார் கண்டறிய வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.
காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கும் நிலையில், நியாயம் கேட்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?