அய்யம்பேட்டை அருகே  இளைஞர் அடித்துக் கொலை -இருவர் கைது  

மேலும் தலைமறைவாக உள்ள பரணி மற்றும் பாம்பு சரவணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Dec 2, 2023 - 12:56
Dec 2, 2023 - 16:37
அய்யம்பேட்டை அருகே  இளைஞர் அடித்துக் கொலை -இருவர் கைது  

அய்யம்பேட்டை அருகே  விஜய் என்ற இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் புள்ளமங்கை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(22) தனது தந்தை ராஜேந்திரன் இறந்த நிலையில்,தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார்.

இவர் அப்பகுதியில் கிடைக்கும் சிறு,சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சூலமங்கலம் ராயல் கார்டன் மனைப்பிரிவில் விஜய் முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மேலும் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில்களும் கருங்கல்லில் ரத்த கரையும் இருந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா மற்றும் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்(27) பாம்பு சரவணன் மற்றும் பரணி ஆகியோருடன் சேர்ந்து விஜய் மது அருந்தி கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதில் விஜயை அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்,சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அருணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பரணி மற்றும் பாம்பு சரவணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow