பெரியபாளையம் அருகே பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு

கடந்தாண்டு இதேபோல் மாலந்தூர்,ஆவாஜிபேட்டை கிராமத்தில் சுமார் 2 அடி உயரம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் 2 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது

Dec 2, 2023 - 12:43
Dec 2, 2023 - 16:37
பெரியபாளையம் அருகே பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு

பெரியபாளையம் அருகே பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள்  இருப்பதைக் கண்டு பெரியபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் ராக்கெட் லாஞ்சர் குண்டினை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மையை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு இதேபோல் மாலந்தூர்,ஆவாஜிபேட்டை கிராமத்தில் சுமார் 2 அடி உயரம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் 2 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பெரியபாளையம் அருகே அடுத்தடுத்து பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow