10 ரூபாய் பிரியாணி.. புரட்டாசி விரதத்தை தூக்கி எறிந்த மக்கள்...!

ஆரணி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் பொதுமக்கள் முண்டியடித்து  கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர்.

Oct 4, 2024 - 13:38
10 ரூபாய் பிரியாணி.. புரட்டாசி விரதத்தை தூக்கி எறிந்த மக்கள்...!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்காக அசைவம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், சைவ உணவுகளை மட்டும் உட்கொள்வர்.  இந்தாண்டு புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பே லட்டு பிரச்னை உருவாகி பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது. அதனை மீறியும் புரட்டாசி விரதம் இருந்துவருகின்றனர். 

இந்நிலையில் காலை திறப்பு விழா முடிந்த பின்பு, 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் காலையிலிருந்து அருகில் காத்துக் கொண்டிருந்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே நந்தகுமார் என்பவர் மகாராஜா பிரியாணி என்று புதியதாக பிரியாணி கடையை திறந்துள்ளார். இந்த கடை திறப்பு நாளான இன்று(அக்., 4) 100 ரூபாய் பிரியாணி 10 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும் என்று ஆரணி நகர் முழுவதும் நேற்று வால்போஸ்டர் ஒட்டப்பட்டது. 

பின்னர் பொதுமக்கள் 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு சென்றதால் கடை உரிமையாளர் அனைவருக்கும் டோக்கன் வழங்கி வரிசையில் நிற்க வைத்து அனைவருக்கும் பிரியாணி வழங்கினர். பொதுமக்கள் புரட்டாசி மாதம் என்று கூட பாராமல் வரிசையில் நின்று 10 ரூபாய் பிரியாணியை வாங்கிக் கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow