தடுமாறிய இந்திய அணியை தலைநிமிர வைத்த அபிஷேக் சர்மா…
சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 100 சிக்சர்களை விளாசி புதிய வரலாற்று சாதனையை இந்திய இளம் வீரரான அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி 20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து இதன் பின் களமிறங்கிய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும் பின்னர் வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் இந்திய அணி 2 ஓவர்களில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட அசராமல் ஷகிப் மஹ்மூத் வீசிய 4வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசினார். தொடர்ந்து லூக் வுட் வீசிய 5வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். இதன் மூலமாக அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதிரடியாக வெளுத்து கட்டினார்.இதன் மூலம் அபிஷேக சர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இவான் லூவிஸ் 789 பந்துகளில் 100 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதம் இதுதான். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 4 சிக்ஸ் 4 பவுண்டரி உட்பட 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணிணை தலைநிமிர வைத்து ஒரு மாபெரும் சாதனை புரிந்துள்ளார் அபிஷேக் சர்மா.
மேலும் ஃபின் ஆலன் 871 பந்துகளில் 100 சிக்சர்களையும், டிம் டேவிட் 931 பந்துகளில் 100 சிக்சர்களையும் விளாசியுள்ளனர். ஆனால் அபிஷேக் சர்மா 785 பந்துகளில் 100 சிக்சர்களை பறக்கவிட்டு ஒரு புதிய வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம் வரலாற்றில் 100 சிக்சர்களை விளாசிய 5 வது வீரராக அபிஷேக் சர்மா உருவெடுத்துள்ளார்.
இந்த வரலாற்று சாதனைப் பட்டியலில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், 179 சிக்சர்களுடன் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திலும், 126 சிக்சர்களுடன் ஹர்திக் பாண்டியா 2வது இடத்திலும், 124 சிக்சர்களுடன் விராட் கோலி 4வது இடத்திலும் இருக்கின்றனர்.
What's Your Reaction?