AK Fans Assemble.... மாஸாக ரிலீஸாகும் அஜித்தின் ரேஸிங் ஆவணப்படம்...!

நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'RACING ISN'T ACTING' ஆவணப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

Jul 28, 2026 - 13:29
AK Fans Assemble.... மாஸாக ரிலீஸாகும் அஜித்தின் ரேஸிங் ஆவணப்படம்...!
ajithkumar

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அஜித்குமார் நடிப்பைத்  தாண்டி சர்வதேச அளவில் கார் பந்தய வீரராகவும் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகின்றார்.

குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பிறகு கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வரும் அவர் கடந்த ஆண்டு அஜித்குமார் ரேசிங் என்ற தனது சொந்த பந்தய அணியை தொடங்கினார்.அஜித்குமார் ரேசிங் அணி துபாய்,பெல்ஜியம், உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது. மேலும் எதிர்காலத்தில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் அணி திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் என்னவென்றால் அஜித்குமாரின் கார் பந்தய பயணத்தை மையமாகக் கொண்டு 'RACING ISN'T ACTING'  என்ற ஆவணப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் ஏ.எஸ்.விஜய் இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆவணப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இதன் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை விரைவில் நடிகர் அஜித்குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஏ.எல்.விஜய் இந்தியாவில் கார் பந்தயத்தை ஒரு முக்கிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே அஜித்குமாரின் கனவு. இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும் அனைத்து காட்சிகளும் உண்மையான கார் பந்தயங்களில் பதிவு செய்யப்பட்டவை. இதில் எந்தக் காட்சியும் சினிமாவுக்காக உருவாக்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் ஆவணப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow