நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக ஆலியா பட்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதன் பின்னால் அவர்களின் தனிப்பட்ட கனவுகள் மட்டுமல்லாமல், குடும்பங்களின் எதிர்பார்ப்புகளும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை என்றும், எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த பாதையை உருவாக்கும் நோக்கத்துடனும் குரல் எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் போராட்டத்தையும் உறுதியையும் சமூகம் கவனமாகக் கேட்க வேண்டிய நேரம் இது என்றும் ஆலியா பட் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.மாணவர்களின் எதிர்காலம் அவர்களுக்கே சொந்தமானது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
நீட் விவகாரத்தில் ஏற்கெனவே பல்வேறு திரை பிரபலங்கள் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆலியா பட்டின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
What's Your Reaction?