Vijay: திருவனந்தபுரத்தை திணற வைத்த விஜய்… தளபதி ரசிகர்கள் பண்ண அட்ராசிட்டிய பாருங்க!
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார் விஜய்.
விஜய்யின் 'தளபதி-69' இயக்குநர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுபற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.
இதனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், கோட் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெறவுள்ளது. இதற்காக வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட் சென்றுவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து ஹீரோ விஜய்யும் விமானம் மூலம் கேரளா சென்றார். மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், ஃபஹத் பாசில், துல்கர் சல்மான் என மலையாள டாப் ஹீரோக்களை விட விஜய்க்கு கேரளாவில் கிரேஸ் அதிகம்.
அதிலும் 'காவலன்' படத்துக்குப் பின்னர் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார் விஜய். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் என்ட்ரியான விஜய்யை வரவேற்க திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். காலையில் இருந்தே விஜய்க்காக காத்திருந்த மல்லுவுட் ஃபேன்ஸ், விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வருவதை பார்த்ததும் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இதனால் திருவனந்தபுரம் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
முக்கியமாக அதேநேரத்தில் மலையாள நடிகர் திலீப்பும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தான் இருந்துள்ளார். ஆனாலும் அவரை மலையாள ரசிகர்கள் கண்டுகொள்ளாமல் விஜய்யை கொண்டாடித் தீர்த்தது கோலிவுட்டையே வியக்க வைத்துள்ளது. விஜய் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
What's Your Reaction?