தவெக மாநாட்டில் நான் பங்கேற்கிறேனா? -KPY பாலா சொன்ன பதில்
தவெக மாநாடு குறித்து பேசும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. நான் சாதாரண ஆள் எனக்கு பேச வயதுமில்லை, தகுதியும் இல்லை என KPY பாலா பேட்டி
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ளும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட KPY பாலா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.பின்னர் ஷோரூம்மில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த KPY பாலா , “ குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்வையாளர்கள் குறைந்து வருவதாக குறித்த கேள்விக்கு, நான் கடந்த இரண்டு சீசன்களாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை. ஆகவே அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
பாலா படம் நடிப்பது குறித்த கேள்விக்கு, அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகின்றன. ஆனால் இன்னும் துவங்கப்படவில்லை, துவங்கும்போது அறிவிக்கிறேன் என்றார்.பாலா தொடர்ந்து உதவிகள் செய்வது குறித்த கேள்விக்கு, நிறைய உதவிகள் செய்ய ஆசை உள்ளது. உதவிகளை சொல்லிவிட்டு செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, செய்துவிட்டு சொல்லும் சாதாரண ஆள் நான். மேலும் தவெக மாநாடு குறித்தான கேள்விக்கு, மாநாடு குறித்து பேசும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. நான் சாதாரண ஆள் எனக்கு பேச வயதுமில்லை, தகுதியும் இல்லை, அறிவும் இல்லை.மேலும், விஜய் மாநாட்டில் பங்கேற்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகன்” என தெரிவித்தார்.
What's Your Reaction?