வேளாண் மண்டலத்தில் இதெல்லாம் வருவதில் தவறில்லை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 

தஞ்சாவூர் விமான நிலையம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Oct 17, 2024 - 17:19
வேளாண் மண்டலத்தில் இதெல்லாம் வருவதில் தவறில்லை-அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் தவறில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மினி டைட்டில் பார்க்கில் தொடங்கப்பட்ட ஐடி நிறுவனத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ தஞ்சாவூரில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட டைடல் நியோ பார்க்கில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. திறந்த குறுகிய காலத்திலே கம்பெனிகள் அனைத்தும் வந்துவிட்டது. டெல்டா மாவட்ட படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்ததாக தூத்துக்குடியில் நியோ டைட்டில் பார்க் திறக்கப்பட உள்ளது. செங்கிப்பட்டியில் சிப்காட் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் எந்த தவறும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரலாம். 

தஞ்சாவூர் விமான நிலையம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow