சாதிப்பெயரை சொல்லி திட்டிய ஊராட்சி மன்ற தலைவர்… கொதித்து போன அதிமுக எம்.எல்.ஏ!

சாதிப்பெயரை சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் திட்டியதையடுத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அதிமுக எம்எல்ஏ மனு கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sep 25, 2024 - 16:10
சாதிப்பெயரை சொல்லி திட்டிய ஊராட்சி மன்ற தலைவர்… கொதித்து போன அதிமுக எம்.எல்.ஏ!

கோவை மாவட்டம்  எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால், கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக புகார் கூறினர். 

இந்நிலையில், வெள்ளாளப்பட்டி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றுள்ளனர். 

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, தங்களை ஜாதி பெயரை குறிப்பிட்டு இழிவுப்படுத்துவதாகவும், தங்கள் மீது பொய் புகாரை அளித்திருப்பதாகவும் அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டனர். 

இந்த மனுவை அளிக்க அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்ததால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow