எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டு முடிவுக்கு வந்த வழக்கு

நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார்.

Nov 27, 2023 - 12:11
Nov 27, 2023 - 12:27
எஸ்.வி.சேகர் மன்னிப்பு  கேட்டு  முடிவுக்கு வந்த வழக்கு

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த கருத்துக்கு எஸ்.வி. சேகர் மன்னிப்பு கோரியதை, புகார்தாரர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகர் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.இதைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை கோர்ட்டில் அய்கோ என்கிற அய்.கோபால்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி ஜெயவேல் விசாரித்தார்.நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார்.

அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக மனுதாரர் அய்.கோபால்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதி ஜெயவேல், நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow