காளையார்கோவில்: நர்சிங் கல்லூரி மாணவி மர்ம மரணம்

மாணவியின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்

காளையார்கோவில்: நர்சிங் கல்லூரி மாணவி மர்ம மரணம்

காளையார்கோவில் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு செய்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்த கோவானூர் கிராமத்தைச் சேர்ந்த மருதலெட்சுமி என்ற மாணவி.இரண்டு மாதங்களுக்கு முன்பு காளையார்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு 12 மணியளவில் மருத்துவமனையின் பின்புறம் மாணவி தங்கியிருந்த அறையில், மருதலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காளையார்கோவில் காவல்துறையினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு சென்ற உறவினர்கள் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்த மாணவியை கண்டு அதிர்ச்சி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

10 மணிவரை தங்களிடம் சந்தோஷமாக பேசியதாகவும், ஆகையால் மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும்,  இறந்த மாணவியின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.ஈசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow