கூரியர் வாகனத்தில் வந்த ரூ. 4 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல்! ஆவணமில்லனா ஆப்பு தான்!
4 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

விருதுநகரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்கம், வெள்ளி பொருட்களை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகம் முழுவதும் மூளை முடுக்குகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சத்திரெட்டியாபட்டி விலக்கு அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த தனியார் கொரியர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் இருந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கேட்டபோது, மதுரையில் உள்ள தனியார் கூரியர் ஏஜென்ஜி மூலம் தங்க நகைகளை நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், வண்டியில இருந்த 7 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 4, 400 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட 4 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?






