வீட்டில் புகுந்த மழைநீர்.. மேல் தளத்தில் தஞ்சம் புகுந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
கனமழை பெய்ததால் வீட்டில் மழை நீர் புகுந்ததால் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கிய போது 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது.
கனமழை பெய்ததால் வீட்டில் மழை நீர் புகுந்ததால் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கிய போது 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது.
சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த 15ஆம் தேதி கனமழையின் காரணமாக சிறுமியின் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது.
சிறுமியின் தந்தை வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது மேலே உள்ள அறையில் தாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்ததன் பேரில் மேலே உள்ள அறையை சிறுமியின் தந்தை சுத்தம் செய்து வந்துள்ளார்.
அப்போது சிறுமி வெளியே செல்ல குடையை எடுத்த போது குடை பழுதாகி இருந்திருக்கிறது. அப்போது அருகே அறையில் இருந்த 52 வயதான சுரேந்தர் என்பவர் குடையை சரி செய்து தருவதாக கூறி சிறுமியை அழைத்திருக்கிறார். அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி அளித்த தகவலின் பெயரில் அவரது தந்தை சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக போன் செய்து நேற்று தகவல் தெரிவித்த நிலையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?