வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sep 24, 2024 - 14:59
வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
file image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

‘மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து. மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow