இஸ்ரேல் - லெபனான் இடையே வெடித்த போர்.. கொத்துக்கொத்தாக மடியும் அப்பாவி மக்கள்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக ஹமாஸ் அமைப்புடன் இணைந்து லெபனானிஸ் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த வாரம் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் லெபனானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சுமார் 300 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 குழந்தைகள் மற்றும் 39 பெண்கள் உட்பட 274 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய மோதலுக்குப் பிறகு லெபனானில் நடத்தப்படும் மிக உக்கிரமான தாக்குதல் இதுவாகும்.
இந்நிலையில் "இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடன் அல்ல, ஹிஸ்புல்லா உடன்" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹிஸ்புல்லா உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாக லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?