நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் - அவசரமாக விடுதியை காலி செய்ததால் பரபரப்பு
சமூக நலத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை தொடர்ந்து இதுவரை அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் செயல்பட்டு வந்த ஜெல் நீட் அகாடமியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதியை அவசர அவசரமாக காலி செய்யப்பட்டது.
நெல்லையில் இயங்கி வந்த ஜல் நீட அகாடமியில் மாணவ மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக நலத்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில்அங்கு செயல்பட்டு வந்த ஆண் பெண் இருபாலருக்கான விடுதிகள் எந்தவிதமான ஒப்புதலும் இன்றியும் போதிய உட்கட்டமைப்புகள் வசதிகள் இன்றியும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 300 சதுர அடி கொண்ட ஓர் அறையில் ஆறு மின்விசிறிகள் மாற்றப்பட்டு அங்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததும், அந்த அறையில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஏதுமில்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது..
இதனை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை தொடர்ந்து இதுவரை அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த விடுதிகள் காலி செய்யப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கில் முன் பணம் செலவழித்தும், மாதந்தோறும் 20000 ரூபாய் கட்டணமாக கட்டியும் நீட் பயிற்சிக்கு வந்த நிலையில், இதுபோன்ற செயல் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?