திமுக அரசே கடனில் தான் இயங்குகிறது... கானல் நீர் பட்ஜெட் - இபிஎஸ் விமர்சனம்

திமுக அரசே கடனில் தான் இயங்குகிறது... கானல் நீர் பட்ஜெட் - இபிஎஸ் விமர்சனம்

வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த அம்சங்களை சுமார் 127 நிமிடங்கள் அமைச்சர் வாசித்தார். 

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் கடன் உயர்ந்து, நிதி பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி சாலைகள் ஏதும் இதுவரை சரிசெய்யப்படவில்லை, கூடுதலாக வருவாய் இருந்தபோதிலும் எந்தவொரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

வரவு செலவு திட்டத்தில் பல்வேறு குளபடிகள் உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்வதாகவும், இருக்கும் நிதியை வைத்து அதிமுக அரசு சிறப்பான ஆட்சி செய்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow