பெங்களூருவில் வேகமெடுக்கும் ஹெச்.ஐ.வி....ஹோமோ செக்ஸ் காரணமா?
பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஹெச்.ஐ.வி. மற்றும் பாலியல் தொற்றுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்து, பாலியல் ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் ஆணும் ஆணும் உடலுறவில் ஈடுபடும் ஹோமோ செக்ஸ் அதிகரித்து வருவதால், ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்கள் அதிகரித்திருப்பதாக அலறுகிறது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம். 'நிர்வாண பார்ட்டி, இணையைப் பரிமாறிக்கொள்வது என இளம் தலைமுறையினர் அத்துமீறும் நேரத்தில், ஆணுக்கு ஆண் உறவெல்லாம் பெரியளவில் விவாதமாக மாறாதது பெரும் துயரம்' என்று குமுறுகிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்!
இதுகுறித்து விவரமறிந்தவர்களிடம் பேசினோம். 'கர்நாடகத்தில் ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் தொற்றுகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போவதாக அம்மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, கர்நாடகாவில் 2023-24ம் ஆண்டு காலகட்டத்தில் 44,581 ஆக இருந்த ஹெச்ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை 2024-25ல் 62664 ஆகவும், 2025-26ல் 66,606 ஆகவும் உயர்ந்திருப்பதாக கூறியிருக்கிறது. குறிப்பாக 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் அதிகளவில் இத்தொற்றுக்கு ஆளாவதாக கூறியிருக்கிறது. மேலும் சிபிலிஸ், கனோரியா, கிளமிடியா போன்ற பிற பால்வினை நோய்களும் அதிகரித்து வருவதாக அம்மாநில மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் ஆகிய பாலியல் தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டு அவை சுட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இப்படியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் பாலியல் தொற்றுப் பரவலுக்கு ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவே காரணம் என சொல்லப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. 'இது தன் பாலின ஈர்ப்பாளர்களது பிரச்னை இல்லை. பாதுகாப்பற்ற உடலுறவுதான் பிரச்னை' என சொல்லப்பட்டாலும், இன்றைய கலாசார மாற்றம் அது சார்ந்த உரையாடல் அவசியமாகிறது" என்றனர்.
LGBTQ சமூகத்தின் எழுச்சி தான் தன் பாலின ஈர்ப்பாளர்கள் பெருகுவதற்கான காரணமா என இச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரிடம் கேட்டோம். 'நமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் எதிர் பாலினத்தவரின் மீதுதான் காதல் மற்றும் பாலியல் ஈர்ப்புக்கொண்டிருப்பர். இதற்கு மாறான பாலியல் தேர்வு விருப்பமுடைய சிறுபான்மைச் சமூகத்தைத்தான் LGBTQIA என்கிறோம். தன் பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள், திருநர் என பல்வேறுபட்ட பாலியல் தேர்வுகொண்டவர்கள் அடங்கிய இச்சமூகத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்னமும் ஏற்படவில்லை.
ஓர் ஆண், இன்னோர் ஆணுடன் பாலுறவு கொண்டாலே அவர் 'கே' என்றாகி விடாது. கே' போன்ற உறவுகளில் பாலுறவு தாண்டியுமான பிணைப்பு பிரதானமாக இருக்கும். சமூகத்தில் இந்த சிறுபான்மைச் பாலியல் தொற்று சார்ந்த விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறோம். பாலியல் தொழிலில் ஈடுபடுகிற திருநர்களிடமும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திவருகிறோம். கூவாகம் திருவிழாவில்கூட எய்ட்ஸ் வாரியம் போதுமான விழிப்புணர்வை வழங்குகிறது. கருத்தடை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கர்நாடகாவில் ஓரினச்சேர்க்கையால் பாலியல் தொற்று அதிகரித்திருக்கிறது என்றால் அதற்கு பெங்களூரு போன்ற நகரம்தான் காரணம். அங்கு போதைப்பொருள் கலாசாரமும் அதிகம். இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் பலர், பாலியல் வறட்சி காரணமாக சக ஆணுடனேயே உறவு வைத்துக்கொள்கிறார்கள். பாலியல் தேவைக்காக பெண்களை அணுகுவதைக் காட்டிலும் ஆண்களிடம் அணுகுவது இவர்களுக்கு எளிதாக இருக்கிறது. அதற்காக இதில் ஈடுபடுகிறவர்களை LGBTQIA சமூகத்தினராக கருத முடியாது. அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் அப்போதையை பாலுறவுத் தேவை மட்டுமே அதன் பிறகு அவர்கள் பெரும்பான்மை மக்களைப்போல எதிர்பாலினத்தவர் மீதுதான் ஈர்ப்புக்கொண்டிருப்பார்கள்" என்றார்.
சென்னையைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் மோகன் நூகுலாவோ, "பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு பெங்களூரு போன்ற நகரங்களில் திருமணம் இல்லாத பாலியல் உறவு கலாசாரங்கள் பெருகத் தொடங்கிவிட்டன. ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதானாலும் சரி, பாலுறவு கொள்வதானாலும் சரி அதற்கு நிறைய நேரம், பணம் என பெரும் பிரயத்தனங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் இருப்போர் பெண்களைத் தேடிச் செல்கின்றனர்.
வாய்ப்பில்லாதோர் ஆண்களுடனே உறவுகொள்ளும் மனநிலையை நோக்கி நகர்கிறார்கள். அடிப்படையில் இது பாலியல் தேவை சார்ந்ததுதான்.
இன்றைய நவீனகால சூழலில் பாலியல் சுதந்திரம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறோம். LGBTQIA சமூகத்தினருக்காக பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வானவில் தினம் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர். ஆகவே ஆண் ஆண் பாலுறவு என்பது பாலின ஈர்ப்பு சார்ந்த ஓர் இயல்பான உணர்வு. சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல் அதிகரித்துவருவதாலும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு குற்றமற்றது என உறுதி செய்யப்பட்டதாலும், தங்களை வெளிப்படை யாக ஏற்றுக்கொள்பவர்கள் இதுபோன்ற உறவுகளில் ஈடுபடுகிறார்கள்" என்றார்.
இப்படிபட்ட உறவுகள் சமுதாயத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து பெண்ணியவாதிகள் சிலரிடம் கேட்டோம். 'பெருநகரங்களில் போதை கலாசாரம் பெருகியிருக்கிறது. பாலுறவில் புதுமை என்கிற பெயரில் நிர்வாண பார்ட்டி, மனைவியை பரிமாறிக்கொள்வது S7 S7 எல்லா வரைமுறையையும் தாண்டி இப்போது போய்க்கொண்டிருக்கின்றனர்.
போதையிலும், காமத்திலும் எல்லை மீறி திளைக்கும் அளவுக்கு வந்த பிறகு தன்பாலின ஈர்ப்பு பெருகுவதெல்லாம் ரொம்ப சாதாரணமான ஒன்றுதான்" என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள். நிறைந்திருக்கும் நகரங்களில், 'என்ன செய்தாலும் பாதுகாப்பு உபகரணத்தை சரியாக பயன்படுத்துங்க என்பதே எய்ட்ஸ் சுட்டுப்பாட்டு சங்கத்தின் அறிவுறுத்தலாக இருக்கிறது. தனிப்பட்ட மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுதான் நாகரிக சமுதாயத்திற்கான அடையாளம் என்றாலும்கூட இயற்கைக்கு மாறான உறவை தவிர்த்து உடல், மன ஆரோக்கியதை பேணுவதே தலையாய கடமையாகும்.
What's Your Reaction?