ஒரே ஓவரில் 6 சிக்ஸர்.. எலைட் லிஸ்டில் இணைந்தார் மனன் பஷீர்
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார் பல்கேரிய வீரர் மனன் பஷீர்.

பல்கேரியா, துருக்கி, ஜிப்ரால்டார் ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைப்பெற்று வருகிறது. இதில் பல்கேரிய வீரர் மனன் பஷீர் ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடிப்பது என்பது கிரிக்கெட் உலகில் எப்போதும் ஸ்பெஷலான விஷயம் தான். தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்தவர்கள் என்று பார்த்தால் சோபர்ஸ், ரவி சாஸ்திரி தொடங்கி கிப்ஸ், யுவராஜ் என ஒரு பெரிய பட்டியலை நீள்கிறது.
இதுவரை உள்ளூர் முதல்தர போட்டிகள், சர்வதேச போட்டிகள் என எடுத்துக் கொண்டால் மொத்தம் 11 வீரர்கள் தொடர்ந்து 6 சிக்ஸர்களை அடித்து எலைட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் உள்ளனர். இதில் 12-வது வீரராக இணைந்துள்ளார் பல்கேரிய வீரர் மனன் பஷீர்.
9 பந்துகளில் 43 ரன்கள்:
ஜிப்ரால்டார் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பல்கேரியா அணி வெற்றி பெற 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பல்கேரிய அணியினர் 16.3 ஓவர்களில் இலக்கை விரட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் பல்கேரிய வீரர் மனன் பஷீர் தான் எதிர்க்கொண்ட 9 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதில், 7 சிக்ஸர்கள் அடங்கும்.
16 வது ஓவரை கபீர் மிர்பூரி வீசிய நிலையில், அந்த ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடித்து அமர்களப்படுத்தினார் மனன் பஷீர். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மனன் பஷீர் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இதுவரை தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:
--> சோபர்ஸ் (1968) - முதல் தர போட்டியில் மால்கம் நாஷ் பந்துவீச்சில் 6 சிக்ஸர்களை விளாசினார்.
--> ரவி சாஸ்திரி (1985)- ரஞ்சி கோப்பையில் திலக் ராஜ் பந்துவீச்சில் 6 சிக்ஸர்களை விளாசினார்.
--> தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் (2007) - நெதர்லாந்து டான் வான் பங்க் பந்துவீச்சிற்கு எதிராக.
--> யுவராஜ் சிங் (இந்தியா) (2007) - இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சிற்கு எதிராக
--> அலெக்ஸ் ஹேல்ஸ் (2015)
--> ஹஸ்ரட்துல்லாஹ் ஜசாயி (2018)
--> லியோ கார்ட்டர்(2020)
--> கீரன் பொல்லார்ட் (2021)
--> ஜஸ்கரன் மல்ஹோத்ரா (2021)
--> தீபேந்திர சிங் ஜரி (2024)
--> ரியான் பராக் (2025)
--> மனன் பஷீர் (2025)
What's Your Reaction?






