கடைசி டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி தோல்வி... தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா...
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், கடைசி போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைத்தானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 218 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 477 ரன்களைக் குவித்தது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
259 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி அஸ்வின், குல்தீப் ஆகியோரின் மாயாஜால சூழலில் சிக்கி 195 ரன்களில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இறுதியாக இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியிருக்கிறது.
ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவ்விற்கும், தொடர் நாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
What's Your Reaction?