மதுரை துணை மேயர் மீது வழக்குப்பதிவு- மூதாட்டி கொடுத்த புகாரில் நடவடிக்கை

நீதிமன்ற உத்தரவுப்படி மூதாட்டியை தாக்கிய புகாரில் துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Oct 3, 2024 - 17:16
மதுரை துணை மேயர் மீது வழக்குப்பதிவு- மூதாட்டி கொடுத்த புகாரில் நடவடிக்கை

மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மதுரை துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தா. இவருக்கு ஒரு ஆண் மற்றும் 5 பெண் பிள்ளைகள் என ஆறு பிள்ளைகளுடன் இருந்து வருகிறார். இவரது மகன் முருகானந்தம் அதே பகுதியில் வீட்டின் அருகிலயே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் வசந்தா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (எ) கோழிக்குமார் என்பவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக  வைத்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.இந்நிலையில் கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன். வீடு அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுங்கள் என கோழி குமாரிடம் வசந்தா கேட்டுள்ளார்.

அதற்கு 15 லட்சம் ரூபாய் தருகிறேன், வீட்டை முழுவதுமாக கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தனது வீட்டை எழுதிகேட்டு தன்னை தாக்கி மிரட்டியதாக கூறி ஜெய்ஹிந்த்புரம் குமார் (எ) கோழிக்குமார் மற்றும் கணேசன் (எ) வாய் கணேசன், முத்து (எ) புரோக்கர் முத்து ஆகிய 3 பேர் மீதும் மே மாதம் 7ஆம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வசந்தா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மூவர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் நேரில் வந்து கோழிகுமாருக்கு ஆதரவாக பேசி வீட்டை கேட்டும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என கூறியும் தங்களை பொது இடத்தில் வைத்து கற்களால் தாக்க முயன்று, சாதிய ரீதியாக ஆபாசமாக பேசி மிரட்டி காவல்துறையினரை துப்பாக்கியால் சுடுங்கள் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மூதாட்டி வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோர் ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அப்போது வசந்தா அளித்த புகாரில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (எ) கோழிக்குமார் என்பவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன் வீடு அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுங்கள் என கோழி குமாரிடம் வசந்தா கேட்டுள்ளார். இதனால் மே  7ஆம் தேதியன்று வசந்தாவின் வீட்டிற்குள் நுழைந்து தன்னையும் தனது மகனையும் தாக்கியதாக கூறி வசந்த ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே கடந்த ஜூலை 30 ஆம் தேதி அன்று கோழி குமாருக்கு ஆதரவாக மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் , அவரது தம்பி ராஜேந்திரன் இன்று வீட்டை காலி செய்து விட்டு போக வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்ததாகவும், துணை மேயர் நாகராஜன் தன்னுடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வந்து மிரட்டினார் எனவும், மேலும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்வீர்களா எனவும் மிரட்டியதாகவும், அப்போது தனது மகள் பொது இடத்தில் ஆபாசமாக திட்டாதீர்கள் என கூறியதற்கு,  துணைமேயரின் பாதுகாவலரை பார்த்து இவங்களெல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளு என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது நாங்கள் வீட்டிற்குள் சென்றபோது புரோக்கர் முத்து என்பவர் வீட்டிற்குள் வந்து தீயை வைத்து எரித்து கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும்,  அப்போது நாகராஜன் கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் கல்லை போட்டு கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் காவல்நிலையத்தில் உனது மகன் காலை உடைத்தால் தான் சரியாக இருக்கும் என கூறியதோடு  ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு வசந்தாவின் மகனை அழைத்துச் சென்றதோடு முருகானந்தம்  புகார் மனு அளித்தபோது துணைமேயர் பெயரை எழுதக்கூடாது என கூறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்நிலையத்தில் இருதரப்பினரும் சமரசம் செய்வது போல எழுதி வாங்கியுள்ளதாகவும், எங்களது வீட்டை எழுதி வாங்கி மிரட்டி வரும் கோழிக்குமாரின் ஆதரவாளர்களான துணைமேயர் நாகராஜன் அவரது தம்பி ராஜேந்திரன் மற்றும்  புரோக்கர் முத்து ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 10 லட்சம் ரூபாய் வாங்கிய கடனுக்காக 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை எழுதி கேட்டு கோழிக்குமார் என்பவர் மிரட்டுவதாகவும், அவருக்கு ஆதரவாக  துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மூதாட்டி வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி பதிவு ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தார்.இந்நிலையில் இது புகார் மனு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றவியல் 4வது நீதிமன்றத்தில் மூதாட்டியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மூதாட்டியை தாக்கிய புகாரில் துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வசந்தா என்ற மூதாட்டியை தாக்கி  சாதி ரீதியாக பேசி அவரது மகன் மீது எச்சிலை துப்பி , சாட்சி சொல்ல கூடாது என மிரட்டல் விடுத்த புகாரில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார் (எ) கோழிகுமார், முத்துச்சாமி (எ) குட்டமுத்து மற்றும் முத்து ஆகிய 5 பேர் மீது BNS சட்டமான 189(2) சட்ட விரோதமான கும்பலில் உறுப்பினராக இருப்பது, 296(b) பொது இடத்தில் ஆபாச  சொற்கள் பயன்படுத்தியது, 329(4) வீட்டினுள் அத்துமீறல் குற்றம் செய்தல், 115(2) தன்னிச்சையாக காயம் விளைவித்தல், 351(3) மரணம் விளைவிப்பதாக மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow