ரூ.10 கோடியில் மாறப்போகும் அய்யப்பன் தாங்கல் பஸ் ஸ்டாண்ட்- திடீர் விசிட் அடித்த அமைச்சர்கள்

ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைப்பது குறித்தும் எந்த பகுதிகளில் பணிகள் தொடங்கி எவ்வாறு முடிக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

Oct 3, 2024 - 16:57
ரூ.10 கோடியில் மாறப்போகும் அய்யப்பன் தாங்கல் பஸ் ஸ்டாண்ட்- திடீர் விசிட் அடித்த அமைச்சர்கள்

ரூ.10 கோடி மதிப்பீட்டில் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையின் முக்கிய நுழைவாயிலாக இருந்து வருவது அய்யப்பன்தாங்கல். இந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வரும் நிலையில், தினம்தோறும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சி.எம்.டி.ஏ. நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 12 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பெரிய அளவிற்கு பேருந்து நிலையம் அமைப்பது குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று அய்யப்பன் தாங்கல் பேருந்து நிலையத்தை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேருந்து நிலையத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைப்பது குறித்தும் எந்த பகுதிகளில் பணிகள் தொடங்கி எவ்வாறு முடிக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow