மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம்.. சிறார் உள்பட 3 பேருக்கு காப்பு..

செங்கல்பட்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: 2 சிறார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sep 22, 2024 - 13:55
மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம்.. சிறார் உள்பட 3 பேருக்கு காப்பு..

செங்கல்பட்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: 2 சிறார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அருகே திருச்சியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி பகுதிக்கு மாணவி சென்றுள்ளார்.

அதே ஊரை சேர்ந்த உறவினர்களாக 2 சிறார்கள் உள்பட திருமணமான சுந்தர்(23) என்பவர் உள்ளிட்ட 3 பேர் பெண்ணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாணவியை கூட்டாக தூக்கி சென்று காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து விடு திரும்பிய மாணவி தந்தையிடம் தனக்கு ஏற்பட்ட பதிப்பை சொல்லியிருக்கிறார். இதனையடுத்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து விஷயம் போலீஸ்ஸிடம் போக, அவர்கள் இதைப்பற்றி விசாரிக்கத்தொடங்கினர். மேலும், மாணவி  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையாக மருத்துவபரிசோததனை நடைபெற்று ஆதாரங்கள் திரட்டப்பட்டது.

அதே வேலையில் உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர் சுமன் உள்ளிட்டோர் குற்றவாளிகளை  தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் மூவரும் காட்டில் மறைந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தொடர் தேடுதல் வேட்டையில் 16 வயதான இரண்டு சிறார்கள் உள்பட சுந்தர்(23) என்ற இளைஞர் ஆகிய மூன்று பேரை தாழம்பூர் போலீசார் வசத்தில் சிக்கினர். இந்நிலையில் இந்த வழக்கை சிட்லபாக்கம் அணைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் போலீசார்  ஆஜர்படுத்தினர். இதனையடுத்து சிறார்கள் இரண்டுபேரை செங்கல்பட்டு சீர் திருத்தபள்ளிக்கும், சுந்தரை புழல் சிறைக்கும் அனுப்பிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow