kalkandu vadai: கல்கண்டு வடை செய்றது இவ்வளவு ஈஸியா?
செட்டிநாடு பலகாரங்களில் புகழ்பெற்ற கல்கண்டு வடை செய்யும் முறை குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

நாவில் நாட்டியமாடும் செட்டிநாடு உணவுகள் என்கிற தலைப்பில், செட்டிநாடு உணவு வகைகள் தயாரிப்பு குறித்த தொடர் நமது குமுதம் சிநேகிதி இதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
முத்து சபாரெத்தினம் அவர்கள் செட்டிநாடு உணவு வகை தயாரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் நிலையில் இந்த கட்டுரையில் செட்டிநாடு பலகாரங்களில் புகழ்பெற்ற கல்கண்டு வடை செய்வது எப்படி என்பதனை காணலாம்.
கல்கண்டு வடை:
தேவையான பொருட்கள்: வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 கப், பொடித்த கல்கண்டு / சர்க்கரை - 1 கப், உப்பு - 1 சிட்டிகை,எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: உளுந்தம்பருப்பை நன்றாகக் கழுவி, 2 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர், தண்ணீரை வடித்து, கிரைண்டரில் போட்டு, நன்றாக ஆட்டவும். உளுந்து, பாதியளவு அரைபட்டதும், பொடித்த கல்கண்டு / சர்க்கரை சேர்க்கவும். நன்றாக மைய அரைத்தெடுத்து, சிறிய வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, திருப்பி விட்டுப் பொரித்தெடுக்கவும்.
கல்கண்டு வடை பண்டிகை நாட்களான தீபாவளி போன்ற சமயங்களிலும், பிள்ளையாருக்கு விரதம் இருக்கும் சமயங்களிலும் செய்வது வழக்கமான ஒன்றாக இன்றும் செட்டிநாடு வட்டாரங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






