குட் பேட் அக்லி: என்னோட 3 பாட்டு.. யாருக்கிட்ட கேட்டீங்க? இளையராஜா நோட்டீஸ்

குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படத்தில் என் அனுமதியில்லாமல் 3 பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நஷ்ட ஈடு தரவில்லையென்றால் வழக்கு தொடரவும் முடிவெடுத்துள்ளார் இளையராஜா.

Apr 15, 2025 - 13:20
குட் பேட் அக்லி: என்னோட 3 பாட்டு.. யாருக்கிட்ட கேட்டீங்க? இளையராஜா நோட்டீஸ்
music composer ilayaraja issues notice to the production company of good bad ugly movie

அஜித், த்ரிஷா, சிம்ரன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையே கிளப்பி வருகிறது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

புக் மை ஷோ (Book my show) தளத்தில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், மற்ற தரப்பினருக்கு ஜஸ்ட் ஒகே ரகமாக தான் உள்ளது. இருப்பினும், இதுப்போல் அஜித்தை பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று என திரையரங்கு நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே 80 மற்றும் 90-களில் வெளியான விண்டேஜ் பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதுவும் ரசிகர்களை கவரும் வகையில் 
அமைந்துள்ளது.

இந்நிலையில் தான், குட் பேட் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ பாடல்கள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த 3 பாடல்களையும் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதால், குட் பேட் அக்லி படக்குழு 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதை உடனே நிறுத்துமாறும் இளையராஜா தரப்பு கூறியுள்ளது.

Read more: Good Bad Ugly movie review: இப்படி அஜித்தை பார்த்து எவ்வளவு நாளாகுது? ரசிகர்கள் டபுள் ஹேப்பி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow