pineapple kesari: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் பைனாப்பிள் கேசரி செய்முறை!
சமீபத்தில் வெளியான சிநேகிதி இதழில் தனது ஸ்டைலில் பைனாப்பிள் கேசரி தயாரிப்பது எப்படி? என விளக்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

மாதம்பட்டி ரங்கராஜ் குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் தொடர்ச்சியாக நளபாக நாயகன் என்கிற தொடரில் சமையல் குறிப்புடன், நேர்க்காணலையும் வழங்கி வருகிறார்.
பைனாப்பிள் கேசரி செய்முறை விவரங்கள் பின்வருமாறு-
தேவையானவை : பைனாப்பிள் துண்டுகள், ரவை, சர்க்கரை - தலா 1 கப், தண்ணீர் -2 கப், பைனாப்பிள் சாறு - 1/2 கப், நெய் - 4 முதல் 5 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் -2 சிட்டிகை, பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவையைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்து, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து, வதக்கவும். பின்னர், ஊறவைத்த ரவையைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.
மணம் வரும்வரை கிளறி, பைனாப்பிள் சாறு மற்றும் பைனாப்பிள் துண்டுகளைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். அடுத்ததாக, சர்க்கரைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, சர்க்கரைக் கரையும் வரை வேகவிடவும். இப்போது, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, கேசரி ஒட்டும் நிலையில் வரும்வரை வேகவிடவும். இறுதியாக, ஏலக்காய்த்தூள் சேர்த்து, 2 நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்து, இறக்கவும். பாதாம், பிஸ்தா துண்டுகளை அலங்கரித்து, பரிமாறவும்.
Read more: குக் வித் மாதம்பட்டி ரங்கராஜ்: எள்ளு சாதம் இப்படி செய்து பாருங்க!
What's Your Reaction?






