எகிறும் தங்கம் விலை.. மஞ்சள் கொம்பில் தாலி செய்து அசத்திய பொற் கொல்லர்!
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கோவையை சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர், ஏழை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் கொம்பில் தாலி வடிவமைத்து கவனத்தை ஈர்த்து உள்ளார்.

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் கிராமுக்கு ரூ.150 வரை தங்கத்தின் விலை ஏறியது. இன்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,560 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.68,480 ஆக உள்ளது. ஒருப்புறம் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா என்ற பொற்கொல்லர் ஒருவர் மஞ்சள் கொம்பில் தாலியை வடிவமைத்து கவனத்தை ஈர்த்து உள்ளார்.
இது குறித்து பேசிய ராஜா, “நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ளது. இனி வரும் காலங்களில் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும், இதனை கருத்தில் கொண்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய மஞ்சள் கொம்பை வைத்து தாலியை வடிவமைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்”.
What's Your Reaction?






